கமுதி அருகே நடப்பதற்கு லாயக்கற்ற ரோட்டில் சிரமம்
கமுதி: கமுதி அருகே கே.நெடுங்குளம், திருச்சிலுவைபுரம், புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் ரோடு சேதமடைந்து நடப்பதற்கே லாயக்கற்ற ரோடாக மாறியுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கமுதி அருகே கே.நெடுங்குளம், திருச்சிலுவைபுரம், பெருமாள் குடும்பன்பட்டி, தலைவன் நாயக்கன்பட்டி, உடைகுளம், புதுப்பட்டியில் உள்ளிட்ட மூவாயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
கே.நெடுங்குளம் வழியாக செல்லும் ரோடு 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
தற்போது வரை பராமரிப்பின்றி ரோடு குண்டும் குழியுமாக நடப்பதற்கே லாயக்கற்ற நிலையில் மாறி உள்ளது. மழைக்காலத்தில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது.
அவசர காலத்தில் ஆம்புலன்ஸ்சில் செல்வதற்கு கூட சிரமப்படுகின்றனர். இவ்வழியே குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பஸ் இயக்கப்படுவதால் மற்ற நேரங்களில் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு சரக்கு வாகனங்களை செல்கின்றனர். இதனால் 10 கி.மீ., நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் சேறும் சகதியுமான ரோட்டில் மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே புதிதாக ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.