தமிழகத்தில் 2026ல் கூட்டணி ஆட்சி; அதில் நாங்க இருப்போம்; அடித்து சொல்கிறார் அன்புமணி!
ராணிப்பேட்டை: '2026ல் கூட்டணி ஆட்சியில் பா.ம.க., இடம்பெறும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி சூசகமாக தெரிவித்தார்.
ராணிப்பேட்டையில் நிருபர்கள் சந்திப்பில், அன்புமணி கூறியதாவது: நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். தமிழகத்தில் 2026ம் ஆண்டு கூட்டணி ஆட்சி நடக்கும். கூட்டணியில் பா.ம.க., இருக்கும். கூட்டணி ஆட்சி என்பது கூட்டணியில் இருப்பவர்கள் ஆட்சியில் பங்கு பெறுவார்கள். அனைத்து கட்சிகளும் அடங்கிய கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
விஜய்யுடன் கூட்டணியா?
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யுடன் கூட்டணி செல்வீர்களா என்ற கேள்விக்கு, 'இன்னும் ஒரு வருடங்களுக்கும் மேல் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்' என அன்புமணி பதில் அளித்தார்.
தியாகி அல்ல !
கோவையில் முதல்வர் ஸ்டாலின் மக்கள் பணி செய்ய செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார். பல தடைகளை அவர் கடந்து வந்துள்ளார் என பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, 'இதே முதல்வர் தான் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் தியாகி அல்ல ஒரு குற்றவாளி என கூறினார். இப்பொழுது ஜாமினில் வெளிய உள்ள செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஏன் இவ்வளவு பாராட்டு கொடுக்கிறார் என தெரியவில்லை' என அன்புமணி பதில் அளித்தார்.