இந்திய வீரர்களுக்கு கபில் 'அட்வைஸ்' * பயிற்சியில் இறங்கினால் சாதிக்கலாம்

புதுடில்லி: ''தோல்வியை நினைத்து அறைக்குள் முடங்கினால் போதுமா, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டால் மீண்டு விடலாம்,'' என இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் 'அட்வைஸ்' தெரிவித்துள்ளார்.
இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என தோற்றது. 3 போட்டி கொண்ட தொடரை, சொந்த மண்ணில் முதன் முறையாக முழுமையாக இழந்தது. வங்கதேசம் (2), நியூசிலாந்துக்கு (3) என கடந்த 5 டெஸ்டில் 'சீனியர்' கோலியின் சராசரி ரன்குவிப்பு 21.33 ஆக குறைந்தது. கேப்டன் ரோகித் சர்மா (13.30) நிலை மோசமாக உள்ளது.
அடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் ஐந்து போட்டி கொண்ட 'பார்டர் - கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் 4 டெஸ்டில் வென்றால் மட்டுமே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல முடியும், என்ற இக்கட்டான நிலையில் இந்தியா உள்ளது. ஒருவேளை இந்தியா மீண்டும் ஏமாற்றினால், சீனியர் வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து 1983ல் இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை வென்று தந்த, முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியது:
கிரிக்கெட்டின் அடிப்படை பயிற்சி. தொடர்ந்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தும் போது, அடுத்தடுத்து பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
மாறாக, அறைக்குள் உட்கார்ந்து கொண்டு, 'நான் 'பார்மிற்கு' திரும்பி விடுவேன்,' என சொல்லிக் கொண்டிருந்தால், எதுவும் மாறப் போவதில்லை.
கடினமான காலத்தை கடந்து செல்ல வேண்டும் என்றால், பயிற்சி ஒன்று மட்டுமே வழி.

Advertisement