திருமயம் ஈஸ்வரர், பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை:திருமயம் வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த வேணுவனேஸ்வரி உடனுறை சத்தியகிரீஸ்வரர், சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த வேணுவனேஸ்வரி உடனுறை சத்தியகிரீஸ்வரர் கோவில் மற்றும் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது.
திருமயம் கோட்டை மலைச்சரிவில், ஒரே கல்லிலான குடைவரை கோவில்களாக இந்த கோவில்கள் திகழ்கின்றன. பல்லவர் காலத்தில் சைவ - வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த கோவில்கள் திகழ்கின்றன. இங்குள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் 106வது திவ்ய தேசமாக உள்ளது.
இந்த இரு கோவில்களிலும் கும்பாபிஷேக விழா, 19 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நேற்று நடைபெற்றது.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.