பகலிலும் எரியும் தெருவிளக்கு

விருதுநகர் : விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் கால்நடை மருத்துவமனை செல்லும் விலக்கில் உள்ள தெருவிளக்கு தினசரி பகலில் எரிகிறது.

நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து குழல் விளக்குகளும் எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இவை அந்தந்த பகுதி நகராட்சி ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ராமமூர்த்தி ரோட்டில் லிங் ரோட்டில் இருந்து கால்நடை மருந்துவமனைக்கு செல்லும் ரோட்டின் விலக்கில் உள்ள மின்கம்பத்தில் தினசரி பகலில் எரிகிறது. இரவு, பகல் என தொடர்ந்து எரிவதால் அதன் பல்புகள் பலவீனமாக வாய்ப்புள்ளது. இதை உடனடியாக சரி செய்து முறைப்படி இயக்க வேண்டும்.

நகராட்சி பகுதிகளில் இது போன்று தொடரும் அலட்சியத்தால் மின் சிக்கனமும் கேள்விக்குறியாகிறது. மக்கள் பயன்பாட்டிற்கானவற்றில் அரசு துறைகளின் அக்கறை இவ்வளவு தானா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement