வாரத்தில் 6 நாள் வேலை என்பதை இறுதி மூச்சு இருக்கும் வரை தொடர்வேன்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி

9

புதுடில்லி: 'வாரத்தில் 6 நாள் வேலை என்பதை என் இறுதி மூச்சு இருக்கும் வரை தொடர்வேன்' என இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்தார்.


டில்லியில் நடந்த தலைமைத்துவ உச்சி மாநாட்டில், நாராயண மூர்த்தி பேசியதாவது:
இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு அவசியம் தேவை. அதற்கு வாரத்துக்கு ஆறு நாள் வேலை முக்கியம் என்ற நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருக்கிறேன்.
வாரம் 6 நாள் வேலை நாட்களை ஆதரிக்கிறேன். இதை என் இறுதி மூச்சு இருக்கும்வரை கடைபிடிப்பேன். ஒருபோதும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை. என் பணி அனுபவத்தில் நாள் ஒன்றுக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்தேன்.

5 நாள் வேலை



1986ல் வாரத்துக்கு 5 நாள் மட்டுமே வேலை என்ற மாற்றம் எனக்கு ஏமாற்றம் தந்தது. இந்த மாற்றத்தை நான் ஏற்கவில்லை. தேசத்தின் முன்னேற்றத்துக்கு கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். அந்த அயராத கடின உழைப்புக்கு முன்மாதிரியாக பிரதமர் மோடி உள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி நமது முயற்சியில் உள்ளது. போட்டி நிறைந்த உலகத்தில் இந்தியா வளர்ச்சி அடைய நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். இது ஒவ்வொரு இந்தியர்களின் பொறுப்பு. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement