சீனாவை வெல்லுமா இந்தியா * ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில்...

ராஜ்கிர்: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் இன்று இந்தியா, சீன அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பீஹாரில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 7வது சீசன் நடக்கிறது. இந்தியா, சீனா, மலேசியா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து என 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் இரு போட்டியில் மலேசியா (4-0), தென் கொரியாவை (3-2) சாய்த்தது. அடுத்து தாய்லாந்து அணியை 13-0 என வென்றது.
இன்று தனது நான்காவது போட்டியில் உலகத் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள இந்திய பெண்கள் அணி, 'நம்பர்-6' ஆக உள்ள வலிமையான சீனாவை சந்திக்கிறது. கடைசியாக இரு அணிகளும் புரோ லீக் தொடரில் இருமுறை மோதின. இதில் இந்தியா தோற்றது.
ஆனால் இத்தொடரில் இதுவரை இந்தியா 20, சீனா 22 கோல் அடித்துள்ளன. கேப்டன் சலிமா 8 கோல் அடித்து மிரட்டுகிறார். அதேநேரம் தாய்லாந்துக்கு எதிரான 12 பெனால்டி கார்னர் வாய்ப்பில், இந்தியா 5ல் தான் கோல் அடித்தது. இருப்பினும் மத்தியகள பகுதியில் சலிமா, நேஹா, சுஷிலா, உதித்தா சிறப்பாக செயல்படுவது பலம்.
சீன அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற உற்சாகத்தில் உள்ளது. இன்று இந்தியாவுக்கு கடும் சவால் கொடுக்கலாம்.

Advertisement