கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


கே.ஆர்.பி., அணைக்கு
நீர்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி, நவ. 16-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஊத்தங்கரை, நெடுங்கல், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
கிருஷ்ணகிரியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியம் முதல் லேசான மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, கே.ஆர்.பி., அணை, 27.2, நெடுங்கல், 26.2, போச்சம்பள்ளி, 24.4, பெனுகொண்டாபுரம், 23.2, பாம்பாறு அணை, 22, ஊத்தங்கரை, 21, பாரூர், 15.4, அஞ்செட்டி, 3.6, தேன்கனிக்கோட்டை, 3, கிருஷ்ணகிரி, 2.3 என, மொத்தம், 173.3 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த ஆறு நாட்களாக, 495 கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை நீர்வரத்து, 558 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து, 495 கன அடிநீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.50 அடியாக நீர்மட்டம் இருந்தது.

Advertisement