ஊட்டச்சத்தை உறுதி செய்ய திட்டம் இரண்டாம் கட்டமாக துவக்கி வைப்பு


ஊட்டச்சத்தை உறுதி செய்ய திட்டம்
இரண்டாம் கட்டமாக துவக்கி வைப்பு
கிருஷ்ணகிரி, நவ. 16-
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஒப்பதவாடி குழந்தைகள் மையத்தில், ஊட்டச்சத்தை உறுதி செய்ய திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை கலெக்டர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தி.மு.க., எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலை வகித்தார். 20 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் சரயு வழங்கி பேசியதாவது:
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் மூலம், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில், 77.3 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். அதை தொடர்ந்து முதல்வர் இரண்டாம் கட்டமாக ஊட்டச்சத்தை உறுதி செய்ய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில், இரு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது. அதில் சிறப்பு ஆரோக்கிய உணவு கலவை, இரும்புச்சத்து மருந்து, விதை நீக்கப்பட்ட பேரீச்சம் பழம், குடற்புழு நீக்க மாத்திரை, ஆவின் நெய் மற்றும் பருத்தி துண்டு ஆகியவை அடங்கியிருக்கும்.
இவ்வாறு பேசினார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement