முதற்கட்டமாக சாகுபடி செய்த நெல் வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரம்



காங்கேயம்: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்காக கடந்த ஆக., 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.


இதில் திருப்பூர் மாவட்ட பாசனத்தில், காங்கேயம் வட்டத்தில் திட்டுப்பாறை, மருதுறை, நத்தக்காடையூர், முத்துார் மற்றும் கடைமடையான மங்களப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில், முதற்கட்ட நெல் சாகுபடி நடந்தது. போதிய மழை பெய்யா-ததால் தண்ணீர் வசதி உள்ளனர்கள் மட்டும் முதற்கட்ட நடவுப்-பணி மேற்கொண்டனர். இது தற்போது நன்கு வளர்ந்துள்ளது. அதேசமயம் களைச்செடி-களும் செழித்து வளர்ந்துள்ளன. ஊட்டச்சத்து, நீர் மற்றும் சூரியஒ-ளியை எடுத்துக்கொள்ள நெற்பயிருடன் போட்டி ஏற்படுகிறது. இதனால் பயிர் மகசூல் மற்றும் தரம் குறைகிறது. இவற்றை தடுக்க வயல்களில் களை எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement