உடலை தோண்டி பரிசோதனை

வாடிப்பட்டி : பரவை பேங்க் காலனி பாலமுருகன் 44. ரியல் எஸ்டேட் புரோக்கர். கடந்த அக்.,25 இரவு உடலில் சுடுதண்ணீர் பட்ட காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது தாய் வாங்கிய கடன் விவகாரத்தில் என்னுடன் தகராறு செய்தார். அவர்தான் என் மீது சுடு நீரையும் ஊற்றியதாக தெரிவித்துள்ளார். கடந்த அக்.30 மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த பாலமுருகன், அக்.31ல் இறந்தார். போலீசுக்கு தகவல் தராமல் பரவை மயானத்தில் உடலை அடக்கம் செய்தனர். சமயநல்லுார் எஸ்.ஐ., மாயாண்டி புகாரில் வடக்கு தாசில்தார் மஸ்தான் கனி முன்னிலையில் நேற்று பாலமுருகன் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement