ரயில்வே மேம்பால பணிகளை துவங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பால பணி-களை துவங்க வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சி சார்பில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, முத்து, கிரைஸாமேரி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பூபதி, மல்லையன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி பஞ்.,ல் குள்ளனுார், பனந்தோப்பை ஒட்டியுள்ள, நான்கு ஏரிகளை ஆக்கிரமித்துள்ள ஆக்ரமிப்பாளர்களை அப்புறப்படுத்தி, ஏரியை தூர்வாரி நீர் நிலை-களை பாதுகாக்க வேண்டும். முதல்வரால் அறிவித்து, இன்னும் துவங்கப்படாமல் உள்ள, வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்-பாலம் பணிகளை துவங்க வேண்டும்.
மேலும், சனத்குமார் நதியில் கழிவுநீர், சாயப்பட்டறை கழிவு கலந்து, மாசுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.ஜெட்டிஹள்ளி, செம்மாண்டகுப்பம். நத்தம் ஆகிய பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து, சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி-யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement