உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம்

கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுாரில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.


உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடந்த முகாமிற்கு, மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமை வகித்தார். கம்பை-நல்லுார் அனைத்து வணிகர் சங்க செயலாளர் லட்சுமி நாரா-யணன், நிர்வாகிகள் செந்தில், நித்தியானந்தம் மற்றும் காரிமங்-கலம், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த-கோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்-பதி, பாப்பிரெட்டிப்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மளிகை மற்றும் டீ கடைகள், உணவு பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உணவகம், பேக்கரி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள், பால் மற்றும் பால் பொருள் தயாரிப்பு, இறைச்சி கடைகள், சாலையோர துரித உணவுகள், வெல்லம் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள, 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் அளித்தனர்.
இவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு விரைவில் உரிமச் சான்-றிதழ் வழங்கப்படும் என, முகாமில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement