ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம்
தேனி,: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில், தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக நுழைவாயில் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.'
ஓய்வூதியத்தை மின்வாரியமே வழங்கிட வேண்டும். மின்வாரியம் பொதுத்துறை வங்கியாகவே நீடிக்க வேண்டும். விதவை, விவாகரத்தான ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்' உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார்.
செயலாளர் மாரிச்சாமி,அனைத்து ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் ராமமூர்த்தி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், மின்வாரிய ஊழியர்கள் மத்திய சங்க கிளைச் செயலாளர் தேவராஜ் ஆகியோர் பேசினர். மாநில துணைத் தலைவர் சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் அமிர்தவேல்பாண்டியன் நன்றி தெரிவித்தார்.