ராட்சத தேன் கூடு; தாசில்தார் ஆய்வு

திருப்பூர்: தாராபுரத்தில் வீடுகள் அதிகமுள்ள பகுதியில், மரத்தில் விஷ ராட்சத தேன் கூடு குறித்து தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்.

தாராபுரம் நகராட்சி, 24வது வார்டுக்கு உட்பட்ட கண்ணன் நகர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது.

அதில், விநாயகர் கோவில் அருகே புங்கை மரத்தில் மலை விஷ தேனீக்கள், கூடு ஒன்றை கட்டியுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால், கூடு கலைந்து, தேனீக்கள் பொதுமக்களை கடிக்க வாய்ப்புள்ளது.

ஆபத்து ஏற்படும் முன், தேன் கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகராட்சி மற்றும் தாசில்தாரிடம் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். தற்போது, அந்த கூட்டை அகற்றுவது தொடர்பாக, தாசில்தார் திரவியம் கூடு அமைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஒன்றிரண்டு நாட்களில் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Advertisement