சிங்கப்பூருக்கு 18,000 லிட்டர் பால் சேலம் ஆவினுக்கு கிடைத்த 'ஆர்டர்'

சேலம்: சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய கட்டுப்-பாடில் உள்ள, 790 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில், 45,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் மூலம் தினமும், 5.80 லட்சம் முதல், 6 லட்சம் லிட்டர் பாலை, சேலம் ஆவின் கொள்முதல் செய்கிறது.இந்நிலையில் சென்னை அடை-யாறில் உள்ள இந்திய ராணுவ கடற்படை
சமீபத்தில், 4,000 லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பால் கேட்டு, சேலம் ஆவினுக்கு, 'ஆர்டர்' கொடுத்தது. அதன்படி பால் அனுப்-பப்பட்ட நிலையில், மேலும், 6,000 லிட்டர் ஆர்டர் கிடைத்துள்-ளது. இது வரும், 25க்குள் அனுப்பப்படும் என, ஆவின் அதிகா-ரிகள் தெரிவித்தனர். அத்துடன் சிங்கப்பூருக்கு, 18,000 லிட்டர் ஆர்டர் கிடைத்துள்ளது.


அது டிசம்பர், 2ம் வாரத்துக்குள் அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement