வாக்காளராக பதிவு செய்ய 8,131 பேர் ஆர்வம் ஏற்காடு தொகுதியில் அதிகம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டி-யலில் பெயர் சேர்க்க, 8,131 பேர் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்-ளனர்.
வரும், 2025 ஜன., 1ஐ தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்திய-டைவோர், பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடந்தது. கடந்த அக்., 29ல் தொடங்-கிய அப்பணி, வரும், 28 வரை நடக்கிறது. அதை செம்மைப்ப-டுத்த, சிறப்பு முதல் முகாம், 1,269 மையங்களில், 3,264 ஓட்டுச்சா-வடிகளில் தனித் தனியே நேற்று நடந்தது.
அதில் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்க படிவம் 7, குடியிருப்பு மாற்றம், பட்டியலில் திருத்தம் செய்தல், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுதல் மற்றும் மாற்றுத்திற-னாளி என குறிப்பிட படிவம், 8ஐ பூர்த்தி செய்து திரும்ப பெறப்-பட்டன.
அதன்படி பெயர் சேர்க்க, 8,131 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் அதிகபட்சம், ஏற்காடு தனி தொகுதியில், 1,020 விண்-ணப்பம் வரப்பெற்றுள்ளது. பெயர் நீக்க, 1,695; குடியிருப்பு மாற்றம், மாற்று புகைப்பட அடையாள அட்டை, மாற்றுத்திற-னாளி என குறிப்பிடுதல் உள்ளிட்டவை கேட்டு, 4,469 பேர் என, மொத்தம், 14,295 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சட்டசபை தொகுதி வாரியாக பெறப்பட்ட மொத்த விண்ணப்ப விபரம்:
கெங்கவல்லி, 1,357; ஆத்துார், 1,341; ஏற்காடு, 1,570; ஓமலுார், 1,236; மேட்டூர், 920; இடைப்பாடி, 1,577; சங்ககிரி, 1,423; சேலம் மேற்கு, 514; வடக்கு, 1,599; தெற்கு, 1,446; வீரபாண்டி, 1,312 மனுக்கள் முறையே, 14,295 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கமிஷனர் ஆய்வு
சேலம், குகை நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, லைன் மேடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் நடந்த, வாக்-காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமை, மாநகராட்சி கமி-ஷனர் ரஞ்ஜீத் சிங் ஆய்வு செய்த பின் கூறுகையில், ''சிறப்பு சுருக்-கமுறை திருத்த விண்ணப்பங்கள், வரும், 28 வரை பெறப்பட்டு, ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,'' என்றார்.
தொடர்ந்து இன்று முகாம் நடக்கிறது என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.