ரேவதி மருத்துவமனையில் பேரிடர் அவசர திறன் ஒத்திகை
திருப்பூர்: திருப்பூரின் முதல்முறையாக பேரிடர் நிகழ்வில் காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்கும் முறை குறித்து ரேவதி மருத்துவமனை ஊழியர்கள் செயல் விளக்கம் நடத்தினர்.
திருப்பூர், குமார் நகரிலுள்ள ரேவதி மருத்துவமனை வளாகத்தில், வாகன விபத்தில் ஒரே சமயத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கும் முறை குறித்து ஒத்திகை வாயிலாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் பெரிய அளவிலான விபத்து அதிகளவிலானோர் காயமடைந்தால், அவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொண்டு வருதல், காயத்துக்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் ஆகியன குறித்து தத்ரூபமான செயல் விளக்கம் மூலம் விவரிக்கப்பட்டது.
இதில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உதவியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சிக்கு ரேவதி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
நர்சிங் கல்லுாரி இயக்குநர் கற்பகம் தலைமையில், செவிலியர் குழுவினர் இந்த ஒத்திகைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.