மழலையின் அசாத்திய நினைவாற்றல்!

என்னதான் திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்டவோ, அதற்கான அங்கீகாரத்தை பெறவோ இயலாத நிலை, இன்று இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பால் மணம் மாறாத மழலையர் வகுப்பு படிக்கும் குழந்தைகள் துவங்கி, கல்லுாரி படிப்பு முடிக்கும் மாணவ, மாணவியரில் திறமையில் பளிச்சிடுவோருக்கு ஏதேனும் ஒரு வகையில் பாராட்டும், ஊக்குவிப்பும் கிடைத்து விடுகிறது.

திருப்பூர், மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையம் பகுதியில் உள்ள பிளாட்டோஸ் அகாடமி பள்ளியில், எல்.கே.ஜி., படிக்கும் மாணவி கனிஷ்கா, தனது நினைவாற்றல் திறனுக்காக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

எச்சரிக்கை மற்றும் தகவல் அடையாள குறிப்பில், 85 வகை அடையாளங்களையும், அதிகபட்ச போக்குவரத்து சிக்னல் களையும், வெறும், 3.2 நிமிடத்தில் அடையாளம் காண்பித்து, கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இதுதவிர, 50 நாடுகளின் கொடிகளின் பெயரை, பிளாஷ் கார்டு வாயிலாக, வெறும் 1.7 வினாடிகளில் சொல்லி, இன்டர் நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். சாதனை மாணவியை பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸ்டா லோபஸ், பள்ளி முதல்வர் ஸ்ரீகுமாரி ஆகியோர் பாராட்டினர்.

Advertisement