புத்துளிர் போட்டியில் சாதித்த மாணவர்கள்
கோவை: சென்னை அண்ணா பல்கலையில், 'புத்துளிர்' என்ற தலைப்பில், தமிழ்நாடு பள்ளிகளின் புத்தாக்கம் மற்றும் அறிவாற்றல் சவால் போட்டி நடந்தது.
சரவணம்பட்டி, சின்னமேட்டுப்பாளையம், கோயம்புத்துார் பப்ளிக் பள்ளி மாணவர்கள் தமிழ் ஸ்ரீ, பிரிய வேணிகா, ஜனித் தாமோதரன் ஆகிய மாணவர்கள், 'அக்ரோவா' என்னும் தயாரிப்பு கருவிக்காக இரண்டாம் இடத்தை வென்றனர்.
இக்கருவியானது விவசாய நிலங்களில் மண் வளம், தாவரங்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகளை, நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவு மூலம் விவசாயிகளுக்கு வழங்குகிறது.
இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ், விருது வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களையும், இத்தயாரிப்புக்கு உதவிய மாணவர் பவன் கார்த்திக்கேயன் ஆகியோரை, பள்ளி தாளாளர் நிர்மலா வாழ்த்தி, கவுரவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement