கோவில் அருகே நிறுத்தும் வாகனங்களால் கடும் அவதி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலில் பாலாலயம் நடத்தப்பட்டு திருப்பணி நடைபெறுவதால், பிரதான ராஜகோபுர நுழைவாயில் மூடப்பட்டு, அருகே உள்ள மற்றொரு நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது.
நுழைவாயில் பகுதியில் உள்ள தெரு மிகவும் குறுகலாக உள்ள நிலையில், அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், நடைபாதை கடைகள் உள்ளிட்டவை சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு, அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால், பக்தர்கள் மட்டுமின்றி, இவ்வழியாக செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.
எனவே, ஏகாம்பரநாதர் கோவில் நுழைவாயில் அருகே, சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்த போலீசார் தடைவிதிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.