குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று, குளிர்ந்த காற்-றுடன் சாரல் மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான, மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பின், மதியம், 1:00 மணி முதல், 1:30 மணி வரை கரூர் டவுன், க.பரமத்தி, தென்னிலை, ஆண்-டாங்கோவில், வெள்ளியணை, வாங்கல், புலியூர், மண்மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 1.60, அரவக்குறிச்சி, 3, அணைப்பாளையம், 4, க.பரமத்தி, 1.80, மாயனுார், 2, பஞ்சப்பட்டி மற்றும் கடவூர் தலா, 6 ஆகிய அளவு-களில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 2.03 மி.மீ., மழை பதிவானது.
* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனுார், மண-வாசி, கட்டளை, ரெங்கநாதபுரம், லாலாப்பேட்டை, பிள்ளபா-ளையம், வீரவள்ளி, சீகம்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, சிவாயம், ஆகிய இடங்களில், நேற்று காலை முதல் மதியம் வரை லேசான சாரல் மழை பெய்தது. சாரல் மழையால் விவசா-யிகள் மகிழ்ச்சியடைந்தனர். மழை மூலம் மானாவாரி நிலங்-களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள துவரை செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது. சாரல் மழை காரணமாக கிருஷ்ணராயபுரம் பகுதி கிராமங்களில் குளிர்ச்சி நிலவியது.