வேளாண் சார்ந்த தொழிற்சாலை உருவாக்க வலியுறுத்தி தீர்மானம்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க, வட்ட சிறப்பு பேரவை கூட்டம், வட்ட தலைவர் முனியப்பன் தலை-மையில் நடந்தது. மாவட்ட செயலாளர் அருள் குமார் பேசினார். இதில், புதிய வட்ட தலைவராக குமரேசன், செயலாளராக குப்பன், பொருளாளராக ராகப்பிரியா உள்ளிட்ட, 13 பேர் கொண்ட புதிய வட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் பாப்-பிரெட்டிப்பட்டி தாலுகாவில், அரசு மகளிர் கல்லுாரி துவங்க வேண்டும்.
மரவள்ளி கிழங்கு அரவை ஆலை உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழிற்சாலை உருவாக்க வேண்டும். கடத்துார், பையர்நத்தம், வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பஸ் மோதி முதியவர் பலி

Advertisement