மருதகாளியம்மன் கோவிலில் முகூர்த்த கால் நடும் விழா
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியூரில், பிரசித்தி பெற்ற மருதகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை
ஒப்புதலுடன் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தற்போது திருப்பணிகள்
முடிவடையும் நிலையில், வரும், 2025 பிப்., 2ல், காலை, 7:26 முதல், 9:20 மணிக்குள், மகா கும்பாபிஷேக விழா நடத்த விழாக்-குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
அதையொட்டி, முகூர்த்தக்கால் நடும் விழா, நேற்று நடந்தது. உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். பழனி தண்டாயுதபாணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், மருதகாளி-யம்மன் கோவில் திருப்பணி குழு தலைவர் பாலசுப்பிரமணியம், அறங்காவலர்கள் திருநாவுக்கரசு, டாக்டர் பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, முகூர்த்தகால் நடப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement