பூச்சி தாக்கம் காரணமாக முருங்கை வரத்து குறைவு
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்-களில், 30,000 ஏக்கருக்கும் மேல் முருங்கை பயிரிடப்பட்டுள்-ளது. மழை காரணமாக முருங்கை மரத்தை சுற்றி பூச்சி தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பூக்கள், இலைகள் உதிர்ந்து முருங்கை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், மொத்த விற்பனை சந்-தைக்கு முருங்கை வரத்தும் குறைந்துள்ளது.
சந்தைக்கு வரும் முருங்கை காய்களும் பழுத்து, பழுப்பு நிறத்தில் இருப்பதால் முருங்கைக்கு உரிய விலை கிடைப்பதில்லை. தற்-போது முருங்கை கிலோ, 60 ரூபாய் முதல் விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு முருங்கைக்காய், 5 ரூபாய்க்கு விற்ப-னையாகிறது. முருங்கை வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement