கோயில்களில் கும்பாபிஷேகம்

விக்கிரமங்கலம் : நடுமுதலைக்குளம் பல்லாக்கு ஒச்சாத் தேவர் இரண்டு தேவர் வகையறாக்கள் இளைய வாரிசுகளுக்கு பாத்தியப்பட்ட ஒச்சாண்டம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

நவ.,16ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் குடிமக்கள், எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

வாடிப்பட்டி அருகே டி,மேட்டுப்பட்டியில் அழகு முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 3ம் கால யாக பூஜையை தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆயிர வைசியர் இந்து சோழிய செட்டியார் உறவின்முறை மற்றும் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement