தாசில்தாரிடம் உதயகுமார் மனு
வாடிப்பட்டி : சோழவந்தான் சட்டசபை தொகுதியில் 244 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் நவ.16, 17ல் வாக்காளர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான முகாம் நடந்தது.
முகாமை அ.தி.மு.க., எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் ஆய்வு செய்தார். அப்போது சோழவந்தானில் தி.மு.க.,வினர் முதல்வர் படம், கட்சி சின்னம் அச்சிட்ட வாக்காளர் சேர்க்கை படிவத்தை இணைக்க சொல்லி வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாசில்தார் ராமச்சந்திரன், துணைத் தாசில்தார் அல்காபுதீனிடம் மனு அளித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், கருப்பையா, பேரவை மாநில துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர் கணேசன், ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement