கழிவுநீர் தேங்குவதால் மக்கள் மறியல்

உசிலம்பட்டி, : உசிலம்பட்டியில் நேற்று மாலை 4:00 மணியளவில் மழை பெய்தது. மழையால் வத்தலக்குண்டு ரோட்டில் வடகாட்டுப்பட்டி விலக்கு அருகே ரோட்டோரம் இருந்த வாவரகாச்சி மரம் முறிந்து விழுந்தது. சீமானுாத்து ஊராட்சித் தலைவர் அஜித் பாண்டி, தீயணைப்பு வீரர்கள், போலீசார், பொதுமக்கள் இணைந்து மரத்தை ரோட்டில் இருந்து அப்புறப்படுத்தினர்.

மக்கள் மறியல்



மழைநீர் உசிலம்பட்டி பகுதி சாக்கடையுடன் கலந்து கொங்கபட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி அருகே ஊருணிகளில் சென்று சேரும். வழியில் ரோட்டோர சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுவதால், கொங்கபட்டி காலனிக்குள் சாக்கடை கழிவு நீர் புகுந்து விடுகிறது.

இதற்கு தீர்வு கேட்டு கொங்கபட்டி காலனி மக்கள் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மாலை 4:55 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி நகர் போலீஸ் எஸ்.ஐ., முருகராஜ் தலைமையில் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். மறியலின் காரணமாக 15 நிமிடங்கள் மதுரை ரோட்டில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

Advertisement