ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு பக்கவாத சிகிச்சை மைய அங்கீகாரம்
கோவை ; கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியில் நிபுணர்களால் விரிவான பக்கவாத சிகிச்சை குறித்த மருத்துவ கல்வி நிகழ்வு கோகுலம் பார்க் ஓட்டலில் நடத்தப்பட்டது.
மருத்துவமனையின் டாக்டர் அருணாதேவி, வேதநாயகம், முரளி, விக்ரம், முத்துராஜன், அருண் ராம்ராஜ் ஆகியோர் பக்கவாத சிகிச்சை குறித்து விவரித்தனர். டாக்டர்கள், மருத்துவத் துறையினர் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணஸ்வாமி, இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், தலைமை செயல் அதிகாரி ராம்குமார் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன், தலைமை நரம்பியல் நிபுணர் அசோகன் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு, 'மேம்பட்ட பக்கவாத சிகிச்சை மையம்', எனும் பெருமைமிகு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தீவிர பக்கவாதம், பக்கவாதத்திற்குப் பிந்தைய மறுவாழ்வு மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட பக்கவாதம் பராமரிப்பு ஆகியவற்றில் ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நிபுணத்துவத்திற்கு மேம்பட்ட பக்கவாத மைய அங்கீகாரம் ஒரு சிறந்த சான்றாகும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.