பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநாடு இளம் விஞ்ஞானிகளை அடையாளம் கண்டறிய வழிகாட்டும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முகமது சதக் தாஸ்த்தகீர் கல்வியியல் கல்லுாரியில் நடந்தது.
இயக்கத்தின் மாவட்டத் தலைவர் லியோன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் காந்தி வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் சோமசுந்தரம் பயிற்சியை துவக்கி வைத்தார்.
குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பயிற்சி நோக்கம் குறித்து பேசினார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் வழிகாட்டி கையேட்டை வெளியிட்டார். நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில்அழகப்பா அரசு கலைக் கல்லுாரி இணை பேராசிரியர் கருணாகரன், சேதுபதி அரசு கலைக்கல்லுாரி கவுரவ விரைவுரையாளர் பாலமுருகன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கணேசன், வின்சென்ட், விஜயராம் ஆகியோர் கருத்தாளர்களாக ஆய்வறிக்கை தயாரிப்பிற்கான வழிமுறைகளை செயல் விளக்கம் அளித்தனர்.
மாவட்டப்பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார். குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜெரோம், கல்வி ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் ஏற்பாடுகளை செய்தனர்.