ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்க; வங்கதேச அரசு வலியுறுத்தல்

13

டாக்கா: 'ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்த வேண்டும்' என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் வலியுறுத்தி உள்ளார்.

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தனது ஆட்சியின் 100 நாட்களை நிறைவு செய்ததை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து அரசு விசாரணை நடத்தி வருகிறது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது ஒவ்வொரு கொலையிலும் நாம் நீதியை உறுதி செய்ய வேண்டும். போராட்டத்தின் போது, 1,500 பேர் கொல்லப்பட்டனர். 19,931 பேர் காயமுற்றனர். ஒவ்வொரு மரணம் பற்றிய தகவலையும் சேகரிப்பதில் எங்கள் அரசு மிகவும் கவனமாக இருக்கிறது.

பாதுகாப்பு



பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவுக்கு தப்பி சென்ற, பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்த வேண்டும். சிறுபான்மையினர் உட்பட அனைத்து சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தனது அரசு தொடர்ந்து செய்து வருகிறது. ஹிந்து சமூகத்தினர் மட்டுமின்றி நாட்டின் எந்த குடிமகனும் வன்முறைக்கு ஆளாகாமல் இருக்க, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement