மானாமதுரை மேம்பாலத்தில் வளரும் செடிகளால் பாதிப்பு

மானாமதுரை : மதுரை,ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரையில் உள்ள மேம்பாலத்தில் செடிகள் வளர்வதால் பாலத்தின் ஸ்திரத்தன்மையில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும், பரமக்குடியிலிருந்து ராமேஸ்வரம் வரை இரு வழிச்சாலையாகவும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மாற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மதுரையிலிருந்து பரமக்குடி வரை ரயில்வே லயன் செல்லும் இடங்களில் மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் மானாமதுரை பகுதியில் தல்லாகுளம் முனியாண்டி கோயிலிருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை மேம்பாலமும், மேலப்பசலை அருகே மேம்பாலமும் கட்டப்பட்டுள்ளன.

இந்த மேம்பாலங்களில் பக்கவாட்டு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிலாப்புகளுக்கு இடையில் ஆங்காங்கே செடிகளும், மரங்களும் வளர்ந்து வருவதினால் பாலத்தின் ஸ்திரத்தன்மைமையில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement