சிவன் கோயில்களில் சோமவாரம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சிவன் கோயில்களில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு கோயில்களில் விஷேச வழிபாடுகள், சங்காபிஷேகம் நடந்தது.
விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேக பூஜை நடந்தது. இதை முன்னிட்டு சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து மூலவருக்கு புனித நீர் கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
* ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு யாக பூஜை செய்யப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் வைத்தியநாதர் சிவகாமி அம்பாள் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்து மணிகண்டன் தலைமையில் கோயில் பட்டார்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.