கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

பரமக்குடி: பரமக்குடி உதவி கைத்தறி இயக்குனர் அலுவலகம் சார்பில் எமனேஸ்வரம் முருகன் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நெசவாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

கண் மற்றும் கண் நீரழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு, ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் துார மற்றும் கிட்டப் பார்வை குறைபாடுகள், கண்புரை, கண் தசை வளர்வது கண்டறியப்பட்டது. நெசவாளர்கள் பலருக்கும் இலவச கண்ணாடிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கண் பார்வை கோளாறு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை பரமக்குடி உதவி கைத்தறி இயக்குனர் சேரன் மற்றும் செயலாட்சியர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

பரமக்குடியில் 80க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Advertisement