பெரியார் பல்கலையில் சரிந்து வரும் மாணவர் சேர்க்கை காலி பணியிடங்கள், கற்றல் தரமின்மை காரணமா?

சேலம்: பெரியார் பல்கலையில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதற்கு காலி பணியிடங்களை நிரப்பாதது, கற்றலில் தரமின்மை கார-ணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


சேலம் பெரியார் பல்கலை, 1997ல் நிறுவப்பட்டது. 2021ல், 'நாக்' கமிட்டி ஆய்வு செய்து, 'ஏ பிளஸ் பிளஸ்' அங்கீகாரம் வழங்கியுள்-ளது. பல்கலையில் இணைவு பெற்று சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 118 கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. தவிர பெரியார் பல்கலை வளாகத்தில் மட்டும், 27 துறைகள் செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் என, 170 பணியிடங்கள் உள்ளன. இவற்றில், 14 பேராசிரியர், 11 இணை பேராசிரியர், 5 உதவி பேராசிரியர் உள்-பட, 30 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இவற்றில் கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் உள்-ளிட்ட சில துறைகளை தவிர்த்து பெரும்பாலான முதுநிலை படிப்-புகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், கற்றலில் தரமின்மையாலேயே, மாணவர்கள் பல்-கலையில் சேர விருப்பம் காட்டுவதில்லை என்ற புகாரும் எழுந்-துள்ளது.
௩௦ சதவீதம்


இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: பெரியார் பல்கலையில் ஆசிரியர்கள் நியமனம் என்பது வெளிப்படையாக, தகுதி அடிப்ப-டையில் நடப்பதில்லை. அரசியல் குறுக்கீடு, சிபாரிசு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தகுதிகள் புறக்கணிக்கப்பட்டு, தகுதி இல்லா-தவர்கள் நியமிக்கப்படுகின்றனர். பல துறைகளில், 'கிராஸ் மேஜர்' படித்தவர்கள் கூட, பேராசிரியர்களாக
உள்ளனர். கவுரவ விரிவுரையாளர்களும் அந்தந்த துறை பேராசிரி-யர்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையா-னவர்களை தேர்வு செய்து கொள்வதால், கற்றலில் தரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. நுாலக அறிவியல், கல்வியியல், சமூக-வியல், பொருளியல், கணிதம், தமிழ், ஆங்கிலம் உள்பட பல்-வேறு துறைகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் மாணவர் சேர்க்கை உள்ளது. இங்கு குறைந்தபட்சம், 30 மாணவர்-களை சேர்க்க முடியும். இதற்கு பலமுறை கால அவகாசம் நீட்-டித்தும் மாணவர்களை சேர்க்க முடியவில்லை.
கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, 30 சதவீதம் வரை, முது-கலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை சரிந்துள்ளது. ஆய்வு உள்-ளிட்ட துறை சார்ந்த நடவடிக்கைகளிலும் தொய்வு ஏற்பட்டுள்-ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதுநிலை மையத்திலும் சரிவு
பெரியார் பல்கலையின் முதுநிலை விரிவாக்க மையம், தர்மபு-ரியில் உள்ளது. அங்கு செயல்படும், 8 துறைகளில், ஜியாலஜி, மேலாண்மை தவிர மற்ற துறைகளில் ஒற்றை இலக்க எண்ணிக்-கையில் மாணவர்கள் உள்ளனர். அங்கு, 20 ஆசிரியர் பணியி-டங்கள், கவுரவ விரிவுரையாளர்கள் இருப்பினும், மாணவர் எண்-ணிக்கை சரிந்து வருகிறது. இதற்கான காரணங்களை கண்டறிந்து ஊரக பகுதி மாணவ, மாணவியருக்கு, உயர்கல்வியை வழங்க நட-வடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி கல்வியாளர்கள் வலி-யுறுத்தி உள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கூறு-கையில், ''தமிழகத்தின் எல்லா பல்கலையிலும் மாணவர் எண்-ணிக்கை, இதே நிலையில்தான் உள்ளது. இங்கு ஜெகநாதன் துணைவேந்தராக இருப்பதால் மட்டும் மாணவர் சேர்க்கை குறைந்து விடவில்லை. இங்கு எத்தனையோ நல்லது நடக்கிறது. அதை நீங்கள் எதுவும் எழுத போவதில்லை,'' என்றார்.

Advertisement