தங்கவயல் செக் போஸ்ட்!

* காயா...பழமா?

பெமல் பேக்டரி ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கையை மத்திய தொழில் துறை அமைச்சரே தீர்ப்பதாக வந்து சொன்னாரு. அவரா வந்தாரா அல்லது அவரை டில்லி மேலிடம் சொல்லி அனுப்பி வெச்சாங்களா. அவருக்கு ஏன் கரிசனம் வந்ததுன்னு பலருக்கும் 'ஷாக்' ஏற்பட்டதாம்.

இவரோட பேச்சை நம்புறோம். ஆனால் எழுத்து மூலமாக கொடுத்தால் தான் ஓ.கே., அதுவரை போராட்டம் தொடரும்னு சொல்லிட்டாங்க. இம்மாதம் 22ல், கு.அண்ணா தலைமையில் நடக்கும் பேச்சு, காயா... அது பழமான்னு தெரிய போகுது. அதுக்கு பிறகு தான் போராட்டத்தை முடிப்பாங்களாம். ஏமாறாதே, ஏமாற்றாதேன்னு அவர்களின் உள் மனசு பேசுதாம்.

----------

* யார் காட்டில் மழை?

கோல்டு சிட்டியில் மாநில, தேசிய, சர்வதேச தொழிற்சாலைகள் எல்லாம் வரப்போகுது. நிலத்தை சமப்படுத்தும் வேலைகளும் நடக்குது. இந்த தொழிற் பூங்கா அமைய நிதி எங்கிருந்து எவ்வளவு ஒதுக்க போறாங்க. முதலீடு செய்ய எத்தனை கம்பெனிகள் வரப்போகுதோ.

கோல்டு சிட்டியில் பேக்டரி பெயரில், பல கோடியில், பம்பர் வரப்போவது நிஜம் என்கிறாங்க. இதனால் யார் காட்டில் பண மழை பெய்யப்போகுதோ. ஏற்கனவே, கோல்டு சிட்டியின் மஸ்கம் பகுதியின் தொழிற் பேட்டையில் பல தொழிற்சாலைகள் பல வருஷமா மூடியே கிடக்குது. இதனை திறக்க யாரும் இல்லை.

ஆனால், புதுசா தொழிற் பூங்கா மலரப்போகுதென, நிலம் சமப்படுத்தும் வேலையை தான் பார்க்க முடியுது. எப்படியோ, கோல்டு சிட்டியில் ரியல் எஸ்டேட் தொழில் தான் ஓ...ஹோன்னு நடக்கப் போகுது.

-------

* வேலி எங்கே?

மைசூரு 'முடா' போல தங்கம் விளையும் சிட்டியில் 'குடா' ஆபீசும் இருக்குது. ரா.பேட்டை யில் உள்ள இந்த ஆபீசின் பக்கத்தில், மைன்சுக்கு சொந்தமான பாழடைந்த கட்டடமும் இருந்தது. அது இடிந்து விழுந்து, தற்போது கட்டாந்தரையா ஆகிடுச்சு.

இந்த நிலம் யாருக்கு சொந்தம்னு மைன்ஸ்காரங்க 'சேப்டி' செய்ய, அதன் பெயர் பலகைய வைக்க வேணாமா. வன நிலத்தையே ஆட்டைய போடும் பலே கில்லாடிகள் உள்ள கோல்டு சிட்டியில், இதனை பட்டா பதிவு செய்யாமல் விட்டு வெச்சிருப்பது மகா அதிசயமா இருக்குதேன்னு சொல்றாங்க. இதையும் கபளீகரம் செய்யறதுக்கு சில ஆபீசர்கள் உடந்தையா இருக்காங்களாமே.

------

* புல்லுக்கட்டின் வீராப்பு!

மாநிலத்தின் சி.எம்.,களில், அதிக தடவை கோல்டு சிட்டிக்கு வந்தவர் பட்டியலில், கு.அண்ணா தான் முதலிடம். அதனால் அவருக்கு, யார் எப்படி என்பது நல்லாவே தெரியுமாம். கோல்டு சிட்டியில் இருந்து, அசெம்பிளிக்கு புல்லுக்கட்டு சார்பில் ஒருவரை உருவாக்க, பெரிய பிளானே இருக்குது.

அறக்கட்டளை பேரில் எட்டு ஆண்டுகளாக ஜனங்க மத்தியில் ஒருவர் பேசப் படுகிறார். அவரை புல்லுக்கட்டு கட்சியில் இழுக்க போறாங்களாம். கோலார் மாவட்டத்தில் ஒரு செங்கோட்டைக்காரர் உள்ளார். இதுக்குட்பட்ட 6 தொகுதிகளில் ஏற்கெனவே 2 அவங்க வசம் இருக்குது. மேலும் 2 தொகுதிகளை பிடித்துவிட திட்டம் தயார் செய்திருக்காங்க.

***

Advertisement