ஒன்றிய செயலருக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி அயோத்தியாப்பட்டணம் தி.மு.க.,வில் கோஷ்டி பூசல்
சேலம்: சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.,வில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், வடக்கு, தெற்காக பிரிக்கப்பட்ட பின், வடக்கு ஒன்றிய செயலாளருக்கு எதிராக கட்சியில் பலர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
சேலம் கிழக்கு மாவட்ட, தி.மு.க.,வில், ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய பாக முகவர்கள் கூட்டம், சின்னனுாரில் கடந்த, 15ல், நடந்தது. தொகுதி பொறுப்பாளரான, மாநில இளைஞரணி துணை செயலர் ஆனந்தகுமார் தலைமையில் கூட்டம் நடந்தது.
அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கவுதமன், துணை செயலர்கள் செந்தில், ஆறுமுகம், மகாலட்சுமி, பொருளாளர் பழனிவேல், பிரதிநிதிகள் கண்ணையன், அகரம் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்கவில்லை. ஒன்றிய செயலர் ரத்-தினவேல் மீதான அதிருப்தி காரணமாகேவே, ஒன்றிய நிர்வா-கிகள் பலர் கூட்டத்தை புறக்கணித்தனர். பலருக்கு ஒன்றிய செய-லாளர் அழைப்பு விடுக்கவில்லை என புகார் எழுந்தது.
இதற்கிடையே வடக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக, தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமாருக்கு ஆதரவாக, வடக்கு ஒன்றிய நிர்வா-கிகள் பலர் செயல்படுகின்றனர். மேலும் வடக்கு ஒன்றிய செய-லாளர் ரத்தினவேலுக்கு எதிராக புகார் மனுவும் அனுப்பியுள்-ளனர். அவர் கூட்டும் கூட்டங்களை புறக்கணித்து வருவதால் கோஷ்டி பூசல் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இது குறித்து ஒன்றிய செயலர் ரத்தினவேல் கூறியதாவது:
ஒருங்கிணைந்த அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்துக்கு விஜய-குமார், எட்டு ஆண்டுகளாக ஒன்றிய செயலராக பதவி வகித்தார். இரு ஆண்டுக்கு முன், அயோத்தியாப்பட்டணத்தை தெற்கு, வடக்கு என பிரித்து, தெற்கு ஒன்றிய செயலராக விஜயகுமா-ரையும், வடக்குக்கு என்னையும், கட்சி தலைமை நியமித்தது.
என்னை எதிர்த்து போட்டியிட்ட செந்தில், ஒன்றிய துணை செயலராக நியமிக்கப்பட்டார். அன்று முதல், எனக்கு எதிராக அர-சியல் செய்ய துவங்கினார். அதை பொருட்படுத்தாமல், அவரை வீடு தேடி சென்று நேரில் சந்தித்து, ஒருங்கிணைந்து செயல்ப-டலாம் என, பலமுறை அழைத்தும் ஒத்துவரவில்லை. எனக்கு எதிராக மட்டுமல்ல; கட்சிக்கு எதிராக அவர் செயல்பட்டு வரு-கிறார். அதனால், அவருக்கு அழைப்பு கொடுக்கவில்லை. ஒன்றிய பிரதிநிதி கண்ணையன், இரண்டு ஆண்டாக அரசியலில் ஈடுபாடு இல்லாமல் உள்ளார்.
தெற்கு ஒன்றிய செயலர் விஜயகுமாருக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். ஆனால், கட்சி உத்தரவுப்படி, நான் தனித்தன்மையுடன் செயல்ப-டுவதால் குறிப்பிட்ட சிலருக்கு என்னை பிடிக்கவில்லை.
இவ்வாறு கூறினார்.
தெற்கு ஒன்றிய செயலர் விஜயகுமார் கூறுகையில், ''என்னு-டைய ஆதரவாளராக இருந்தாலும், அனைவரையும் அரவ-ணைத்து கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும். நிர்வாகிகள் அல்லாதவரை வைத்து கொண்டு செயல்படுகிறார். கட்சி தலைமை வழங்கிய தீபாவளி பரிசு பொருட்களை கூட, ஒன்றிய பதவியில் இல்லாதவர்களை வைத்து வழங்கி உள்ளார்,'' என்றார்.
கிழக்கு மாவட்ட செயலர் எஸ்.ஆர்.சிவலிங்கம் கூறுகையில், ''பாக முகவர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொள்ளாதது குறித்து விசாரிக்கப்படும்,'' என்றார்.