இந்து முன்னணி சார்பில் கோபி பச்சமலையில் வேல் வழிபாடு

கோபி: ''இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜியை கைது செய்து, அவரை ஒரு தண்டனை கைதி போல் அடையாளப்படுத்தியதை, இந்து முன்னணி சார்பில் கண்-டிக்கிறோம்,'' என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்-வரா சுப்பிரமணியம் கூறினார்.


கோபியில் பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்-களில், இந்து முன்னணி சார்பில், வேல் வழிபாடு நேற்றிரவு நடந்-தது. இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்-வரா சுப்பிரமணியம், நிருபர்களிடம் கூறியதாவது:


சென்னிமலையில் துவங்கிய வேல் வழிபாடு, சிவன்மலை, பழநி, மருதமலை என நடந்துள்ளது. சென்னிமலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவதாக கூறியதை கண்டித்து, இந்து முன்னணி சார்பில், 50 ஆயிரம் பேர் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து ஆண்டுதோறும், வேலுக்காக யாத்திரை, வழிபாடு நடந்து வருகிறது. நடப்பாண்டில் வரும் டிச.,25ல் திருப்பூர் மாவட்டத்தில் அலகுமலையில் நடக்கும் வேல் யாத்திரையில், 50 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜியை கைது செய்து, அவரை ஒரு தண்டனை கைதி போல், கழுத்தில் சிலேட்டை தொங்கவிட்டு அடையாளப்படுத்தியதை, இந்து முன்-னணி சார்பில் கண்டிக்கிறோம். இவ்வாறு கூறினார்.

Advertisement