ரத்ததான முகாம்

கடலுார்; கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது.

கூட்டுறவுத் துறை மற்றும் அரசு மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்திய முகாமை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் கோமதி துவக்கி வைத்தார். கூட்டுறவுத் துறை அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், சங்க பணியாளர்கள் மற்றும் கூட்டுறவுவாளர்கள் ரத்த தானம் வழங்கினர்.

ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சரக துணைப் பதிவாளர் துரைசாமி, அரசு மருத்துவமனையின் இயங்கும் ரத்த மையத்தின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன், மருத்துவ அலுவலர் வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement