தொண்டி அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயிலில் சேற்றில் தடுமாறும் மாணவர்கள்
தொண்டி: தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி நுழைவு வாயிலில் சேறும் சகதியில் சிக்கி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
தொண்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. தொண்டி, சின்னத்தொண்டி, வட்டாணம், நம்புதாளை, புதுப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 380க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சில நாட்களாக பெய்து வரும் மழையால் பள்ளி நுழைவு வாயிலில் மழை நீர் தேங்கி சகதிக்காடாகி உள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மாணவர்களின் சீருடையும் சேறும் சகதியுமாகி வீணாகிறது. சில மாணவர்கள் சறுக்கி விழுவதால் பாதிக்கப்படுகின்றனர். ஒருவரை ஒருவர் கையை பிடித்துக் கொண்டு செல்கின்றனர். பள்ளி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement