மாட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம்
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, சேந்தமங்கலம், நாமக்கல், புதுச்சத்திரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள், மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதேபோல், மாடுகளை வாங்கி செல்ல கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது சபரிமலை சீசனால், நேற்று கேரளா வியாபாரிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால், 2 கோடி ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement