வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியில் நீரிழிவு நோய் குறித்த சிறப்பு முகாம்

வில்லியனுார் : வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் நீரிழிவு நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு நடந்த நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமிற்கு வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் சேர்மன் ராமச்சந்திரன் தலைமை தாங்கி முகாமை துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் இயக்குனர் டாக்டர் ரத்தினசாமி , முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா, பொதுமேலாளர் சவுந்தரராஜன், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ், சிறப்பு மருத்துவர் ேஷக் அன்வர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு முகாமில் நீரிழிவு நோய் தொடர்பான அறிகுறிகள், சிகிச்சைகள், உணவு பழக்கங்கள் மற்றும் மேலும் நோய் அதிகரிக்காத வகையில் தடுக்கு முறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் சிறுநீர் மற்றும் கண். நரம்பு பரிசோதனகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டது. முகாமில் கல்லுாரி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement