கூட்டுறவு வாரவிழாவில் ரூ.11.50 கோடிக்கு உதவி
மதுரை, : மதுரை மடீட்சியா அரங்கில் கூட்டுறவு வாரவிழா அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் 1052 பயனாளிகளுக்கு ரூ.11.50 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிறந்த 29 கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் வழங்கினார். இதில் அவர் பேசியதாவது:கடந்தாண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் கடனுதவி வழங்கப்பட்டது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, மீண்டும் கடனுதவி வழங்கினார்.
கூட்டுறவு சங்கங்கள் நலிந்தாலும் அரசே கடனுதவி வழங்கும் பொறுப்பை ஏற்றது. இவ்வகையில் ரூ.900 கோடிக்கு மேலாக கடன்தள்ளுபடி செய்துள்ளார். இதுவரை 3 முறை கடனுதவி வஙழ்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் 500 குழுக்களுக்கு கடனுதவி வழங்கிய வகையில் 6 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த், பூமிநாதன் எம்.எல்.ஏ., கூட்டுறவு இணைப்பதிவாளர்கள் குருமூர்த்தி, வாஞ்சிநாதன், ஹேமா சலோமி, பாண்டியன் கூட்டுற வங்கி நிர்வாக இயக்குனர் மனோகரன், ஆவின் பொதுமேலாளர் சிவகாமி உட்பட பலர் பங்கேற்றனர்.