வரியை குறையுங்க

மதுரை : மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் மக்கள் குறைதீர் முகாம் நடந்தது.

கமிஷனர் தினேஷ்குமார், துணை கமிஷ்னர் சங்கீதா, நகர் நல அலுவலர் இந்திரா, மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா, உதவி பொறியாளர் முகம்மது, மாலதி, அலுவலக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மண்டல வார்டுகளான 75 முதல் 100 வரையான பகுதிகளில் வசிப்போர் மனுக்கள் அளித்தனர்.

குறிப்பாக ரோடு வரி, வீட்டு வரி அதிகம் இருப்பதாகவும் அதனை குறைக்க வேண்டியும் மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement