பச்சிளம் குழந்தையை துாக்கிச்சென்ற விலங்கு: தீவிர தேடுதலில் வனத்துறை

பல்ராம்பூர்: உ.பி., மாநிலம் பல்ராம்பூரில், பச்சிளம் குழந்தையை வனவிலங்கு துாக்கிச் சென்ற நிலையில், தேடும் பணி முழு வீச்சில் தொடங்கியுள்ளது.

இது குறித்து வனத்து துறை அதிகாரி செம் மாரன் கூறுகையில்,

பராஹவா எல்லைக்குள் வரும் புஜேரா கிராம பழத்தோட்டத்தில், கீதா தேவி என்பவர், பிறந்து 19 நாளே ஆன பெண் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு கண்விழித்தபோது குழந்தையை காணவில்லை. உடனே சத்தம் போட்டு தேடினார். கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தார்.

காட்டு விலங்கு துாக்கிச்சென்று இருக்கலாம் என்ற கோணத்தில், விலங்கைக் கண்காணிக்க இரண்டு வனத் துறை குழுக்கள் அனுப்பப்பட்டன, இதுவரை கால்தடங்கள் அல்லது தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. கிராமத்திற்கு அருகில் பொறிகளை அமைத்து, விலங்கைக் கண்டறிந்து பிடிக்க அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவுகிறோம்.
கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் தீவிர பணியாற்றி வருகின்றனர் .

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Advertisement