மத்திய அமைச்சரை புகழ்ந்தார் இந்தோனேசிய அதிபர்!
புதுடில்லி: இந்தோனேசிய அதிபர் பிரபோவோ கபியாண்டோவிடம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அன்பான பாராட்டை பெற்றார்.
பிரேசலில் நடந்த ஜி 20 மாநாட்டையொட்டி, பிரதமர் மோடி இந்தோனேசிய அதிபரை சந்தித்து வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தார். இந்தோனேசியா அதிபராக பிரபோவோ கபியாண்டோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
அப்போது பிரதமர் மோடி உடன் இருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ கபியாண்டோவிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். இதற்கு, 'எனக்கு உங்களை தெரியும். நீங்கள் மிகவும் பிரபலமானவர்' என இந்தோனேசிய அதிபர், ஜெய்சங்கரை பாராட்டினார். இந்த பாராட்டை பார்த்து பிரதமர் மோடி சிரித்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உறவு வலுப்படும்!
'பிரதமர் மோடியும், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ கபியாண்டோவும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆலோசனை நடத்தினர். இந்தியாவும், இந்தோனேசியாவும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும்' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (1)
Mohan das GANDHI - PARIS,இந்தியா
20 நவ,2024 - 14:57 Report Abuse
DR.JAISHANKAR INDIA FOREIGN AFFAIRES MINISTER IS A REAL HONEST DIPLOMAT AND HE IS TAMIL TOO. HE IS THE ONE OF THE BEST FM OF INDIA HISTORY WHICH HE TRAVEL BJP HONPM MR.MODIJI GOVERNMENT VIVE TAMILNADU GRACE OF DR.JAISHANKAR.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement