திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து
சத்தியமங்கலம், டிச. 26-
திம்பம் மலைப்பாதையில், மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை, 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவிலிருந்து மக்காச்சோளம் லோடு ஏற்றிக்கொண்டு, பல்லடம் நோக்கி செல்ல திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று காலை 11:00 மணிக்கு லாரி வந்து கொண்டிருந்தது.
இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் வரும் போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவற்றில் மோதி கவிழ்ந்தது. லாரி டிரைவர் குதித்து உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்த விபத்தால், திம்பம் மலைப்பாதையில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement