சமத்துவ நல்லுறவு பெருவிழா


சேலம், டிச. 26-
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சேலம், அரிசிபாளையம் குழந்தை இயேசு பேராலயத்தில் சமத்துவ நல்லுறவு பெருவிழா நேற்று நடந்தது. பங்குத்தந்தை ஜோசப் லாசர், அம்மாபேட்டை இமாம் ஹாபிஸ் ஜியாவுதீன் தாவூதி, பிரம்மகுமாரி ஆகியோர், சிறப்பு சமத்துவ வழிபாட்டை நடத்தினர்.
சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்லம் ராயப்பன், தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் பேசினர். தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. சேலம் மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல் ராஜ்செல்வம், மாவட்ட பொருளாளர் ஜேக்கப், அருள்வளவன், மூவேந்தர் சங்க இயக்குனர் கிேஷார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் உள்பட பலர்
பங்கேற்றனர்.

Advertisement