பார்லி., எதிரே தற்கொலை முயற்சி

புதுடில்லி: டில்லியில், பார்லிமென்ட் முன் தீக்குளித்த உ.பி.,யை சேர்ந்த நபர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டில்லியின் ராய்சினா சாலையில், ரயில்வே அமைச்சகத்துக்கான ரயில் பவன் உள்ளது. அதற்கு எதிரே புதிதாக கட்டப்பட்ட பார்லிமென்ட் கட்டடம் உள்ளது.

ரயில் பவனை ஒட்டிய நடைபாதையில் உ.பி.,யின் பாக்பத் பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவர் நேற்று வந்தார். கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அலறியபடியே, எதிரில் இருந்த புதிய பார்லிமென்ட் பிரதான வாயிலை நோக்கி ஓடிய ஜிதேந்திராவை, அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி தீயை அணைத்தனர்.

உடலில் 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், தனிப்பட்ட காரணத்துக்காக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Advertisement