வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; மிதமான மழை பெய்ய வாய்ப்பு

2

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (டிச., 26) காலை வலுவிழந்தது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதியில் டிச., 17 ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது படிப்படியாக மேற்கு, வட மேற்கில் தமிழகம் நோக்கி நகர்ந்தது. பின்னர், ஆந்திரா நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.


நேற்றைய நிலவரப்படி, இந்த அமைப்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட கடலோர மாவட்டங்களை ஒட்டிய வங்கக்கடலில் நிலவியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (டிச., 26) காலை வலுவிழந்தது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொட்டியது மழை!



சென்னையில் பல்வேறு பகுதிகளில், நேற்றிரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. தரமணி, கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, மெரினா, எழும்பூர், புரசைவாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

Advertisement